சிவமயம்
வட்டுக்கோட்டை சிவன்கோவிலடி கொல்லோளை பதி அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் தேவஸ்தான பரிவார தெய்வங்கள் வைரவ சுவாமி மற்றும் ஜயப்ப சுவாமிக்கு ஏக குண்ட பட்ஷ அஷ்ட பந்தன மகா யாக கும்பாபிஷேக விஞ்ஞாபனம் - 2012
கர்மாரம்பம்
07.06.2012
வியாழக்கிழமை
காலை 9.30 மணி
எண்ணெய்க்காப்பு
08.06.2012
வெள்ளிக்கிழமை
காலை 9.30 முதல் மாலை 5.00 மணி வரை
மகா கும்பாபிஷேகம்
09.06.2012
சனிக்கிழமை
காலை 10.23 முதல் 11.30 மணி வரை
திருச்சிற்றம்பலம்
பரமனை மதித்திடாப் பங்கை யாசனன்
ஒரு தலை கிள்ளியே யொழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமும்
புரிதரு வடுகனை போற்றி செய்திடுவோம்
திருச்சிற்றம்பலம்
காசி விஸ்வநாதப் பெருமான் அடியார்களே!
சைவமும் தமிழும் தளைத்து தானமும் தவமும் ஒருங்கே விளங்கும் புண்ணிய பூமியாகிய ஈழமணித் திருநாட்டில் வடபால் வட்டுக்கோட்டை சிவன் கோவிலடிப்பகுதியில் இயற்கை வளமும் எளிலும் சூழ தெய்வீகத்தன்மை மிளிரும் கொல்லோளை பதி எனும் திவ்ய புண்ணிய பகுதியில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் விசாலாட்சி அம்பிகா தேவி சமேத காசி விஸ்வநாதர் தேவஸ்தான பரிவார தெய்வங்கள் வைரவ சுவாமி மற்றும் ஜயப்ப சுவாமிக்களுக்கு நிகழும் மங்களகரமான நந்தன வருஷ, வைகாசி மாதம், 27 ஆம் நாள் (09.06.2012), மீன லக்கினமும், அவிட்ட நட்சத்திரமும், அமரபட்ஷ ஷஷ்டி திதியும், சித்த யோகமும் கூடிய காலை 10.23 மணி முதல் 11.30 மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடை பெற திருவருள் கை கூடியுள்ளது.
கிரியாகால நிகழ்வுகள்
1ஆம் நாள்
வைகாசி 25 ஆம் நாள்(07.06.2012) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு, புண்ணியாக வாசனம், விநாயகர் வழிபாடு, பிராமண அனுக்ஞை, சுவாமி அனுக்ஞை, தன அனுக்ஞை, திரவிய விபாகம், திரவிய பூஜை, கணபதி ஹோமம், இலட்சுமி நாராயண நவக்கிரக ஹோமம்.
மாலை 6.00 மணிக்கு, புண்ணியாக வாசனம், விநாயகர் வழிபாடு, கிராம சாந்தி, பிரவேச பலி, வாஸ்து சாந்தி, கோ பூஜை, மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், கடஸ்தாபனம், கலாகர்ஷணம், தூபிஸ்தாபனம், தீபஸ்தாபனம், யந்திரஸ்தாபனம், விம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம், யாகாரம்பம், தீபாராதனை, வேத பாராயன திருமுறை ஓதுதல் என்பன நடைபெறும்.
2ஆம் நாள்
வைகாசி 26 ஆம் நாள்(08.06.2012) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு, புண்ணியாக வாசனம், விநாயகர் வழிபாடு, தைலாப்பியாங்கம்(எண்ணைய்க்காப்பு), யாக பூஜை, விசேட திரவிய ஹோமம், தீபாராதனை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், பிரசாதம் வழங்குதல்
மாலை 6.00 மணிக்கு, புண்ணியாக வாசனம், விநாயகர் வழிபாடு, விம்ப சாந்தி, யாக பூஜை, மிருத்திஞ்ச ஹோமம், வீரபத்திர ஹோமம், ஸபர்ஷாகுதி, தீபாராதனை, வேத பாராயன திருமுறை ஓதுதல் என்பன நடைபெறும்.
3ஆம் நாள்
வைகாசி 27 ஆம் நாள்(09.06.2012) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு, புண்ணியாக வாசனம், விநாயகர் வழிபாடு, யாக பூஜை, மகாபூர்ணாகுதி, விஸ்வநாதப் பெருமானுக்கு சங்காபிஷேகம், வீரபத்திர சுவாமிக்கு சங்காபிஷேகம், வேத பாராயணம், ஸ்தோத்திர பாராயணம், நாத சமர்ப்பணம், தாள சமர்ப்பணம், அந்தர் பலி, பகிர் பலி, அதனைத் தொடர்ந்து 10.23 மணி தொடக்கம் 11.30 மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் ஸ்தூபி அபிஷேகம், வைரவப் பெருமானுக்கும் ஜயப்ப பெருமானுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடந்து கோ பூஜை, தச தரிசனம், எஜமான் அபிஷேகம், ஆசியுரை, மகா அபிஷேகம் என்பன நடைபெறும்.
மாலை 6.00 மணிக்கு விசேட பூஜை நடைபெற்று வைரவப் பெருமான் உள் வீதி, வெளி வீதி வலம் வந்து அடியார்கள் யாவருக்கும் திருவருள் பாலிப்பார். அடியார்கள் யாவரும் இக் கும்பாபிஷேக நிகழ்வில் பங்குபற்றி இறைவனின் திருவருளினை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகிறோம்.
குருமார் விபரம்
சர்வ சாதகம்
பிரம்மஸ்ரீ திவாகரபிரதீப் சர்மா (வட்டுசிவன்)
கும்பாபிஷேக பிரதிஷ்டா குரு
சிவஸ்ரீ சு. இரவீந்திரக்குருக்கள் (கோண்டாவில்)
ஏனைய குருமார்
சிவஸ்ரீ ஸ்ரீறினிவாசக் குருக்கள் (கல்வியங்காடு)
சிவஸ்ரீ உமாசுதக் குருக்கள் (கல்வியங்காடு)
யாக சம்ரக்ஷகர்கள்
க.ஜெயகர சர்மா (அரியாலை)
சோ. சண்முகானந்த சர்மா (வட்டுக்கோட்டை)
பாகசாலை
க.நாகராஜா (சுழிபுரம்)
"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"